உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூர்வஜென்ம பாவங்கள் விலக ..

பூர்வஜென்ம பாவங்கள் விலக ..

ஒரு சிறிய உருளியில் அதன் முக்கால் பாகத்திற்கு நெய்யை உருக்கி ஊற்ற வேண்டும். புதிய துணியை பெரிய திரியாக உருட்டி, நெய்க்கு நடுவே வைத்து அதில் தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தில் திருப்பதி ஏழுமலையான் ஒளி வடிவில் இருப்பதாக மனதிற்குள் பாவனை செய்து கொள்ள வேண்டும். துளசி மற்றும் மலர்களைத் துõவி ஏழுமலையான் குறித்த திவ்ய பிரபந்தப் பாடல்களைப் பாட வேண்டும். காலையில் ஏற்றும் இந்த தீபம் மாலை வரை எரியும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். நெய் சேர்க்க முடியாதவர்கள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றலாம். இதன்பின் மாவிளக்கு ஏற்றி, சர்க்கரைப் பொங்கல், வடை, எள் சாதம் முதலியன நைவேத்யம் செய்ய வேண்டும்.  ஏழைகளுக்கு ஆடை தானம் செய்ய வேண்டும். இதனால் நம் பூர்வஜென்ம பாவங்கள் விலகி நற்பலன் ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !