உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓணம் பண்டிகை விடுமுறை: பழநியில் திரண்ட பக்தர்கள்!

ஓணம் பண்டிகை விடுமுறை: பழநியில் திரண்ட பக்தர்கள்!

பழநி: ஓணம் பண்டிகை விடுமுறையால், நேற்று பழநி மலைக் கோவிலில், ஏராளமான கேரள பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மூன்று மணி நேரம் வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். ஓணம் பண்டிகை விடுமுறையால், பழநிக்கு கடந்த சில நாட்களாக கேரள பக்தர்களின் வருகை அதிகமாக இருந்தது. நேற்று ஞாயிறுக்கிழமை என்பதால், கேரள பக்தர்கள் குவிந்தனர். இதனால், ரோப்கார், வின்ச் ஸ்டேஷன்களில், இரண்டு மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து மலைக் கோவிலுக்கு சென்றனர். பொது தரிசன வழியில், மூன்று மணி நேரம் காத்திருந்து, மூலவர் ஞானதண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !