உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீவனுார் லட்சுமிநாரயணப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்

தீவனுார் லட்சுமிநாரயணப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்

திண்டிவனம்: திண்டிவனம் அருகே உள்ள தீவனுார் லட்சுமிநாரயணப் பெருமாள் கோவிலில், புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி,  சுவாமி கருட வாகனத்தில் வீதியுலா நடந்தது. புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி, நேற்று முன்தினம் காலை ௬:௦௦ மணிக்கு  அபிஷேகமும், லட்சுமிநாராயணப்பெருமாள் வெள்ளி கவசத்தில் அருள்பாலித்தார். பிற்பகல் ௨:௦௦ மணிக்கு, உற்சவருக்கு திருமஞ்சனம்  நடந்தது. இதன் தொடர்ச்சியாக மாலை ௭:௦௦ மணிக்கு, ஆதி நாராயணப்பெருமாள் கோலத்தில், கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா  நடந்தது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா  முனுசாமி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !