உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை மிக்கேல் அதிதூதர் கோயில் தேர்பவனி!

திருவாடானை மிக்கேல் அதிதூதர் கோயில் தேர்பவனி!

திருவாடானை : திருவாடானை அருகே ஆண்டாவூரணியில் மிக்கேல் அதிதூதர் கோயில் விழா, செப்.,20ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மாலை 6.30 மணிக்கு ஜெபமாலையும், நவநாள் திருப்பலியும் மற்றும் மறையுரையும் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கும், நேற்று மாலை 4 மணிக்கும் நடந்தது. மிக்கேல் அதிதூதர், இன்னாசியார், அந்தோணியார், சூசையப்பர், ஆரோக்கியமாதா ஆகிய தேர்கள் முக்கிய வீதிகள் வழியாக சென்றன. கும்பகோனம் முதன்மைகுரு பீட்டர் பிரான்சிஸ், பாதிரியார் சாமி லோக்கையா தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. ஏற்பாடுகளை பாதிரியார் லியோரெக்ஸ், சந்தியாகு மற்றும் பங்குமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !