உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில், பிரம்மோற்சவ விழா நேற்று, கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. திருப்பதியில் நடக்கும் பிரமோற்சவ விழாவை போல, சேலம் மாநகரில் செவ்வாய்ப்பேட்டையில் எழுந்தருளிய பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலிலும், பிரமோற்சவ விழா நடத்தப்படும். பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் நேற்று, கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக துவங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சியை முன்னிட்டு வெங்கடாஜலபதிக்கு சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனை, பூஜைகள் நடந்தது. திருப்பதியில் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு, ஸ்வாமி காலை, மாலை ஆகிய இருவேளைகளில் திருவீதி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கும். அதேபோல, சேலம் செவ்வாய்ப்பேட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில், திருப்பதியில் நடக்கும் ஸ்வாமி புறப்பாடு நிகழ்ச்சியை போல், அதே வாகனத்தில், இங்கும் திருவீதி உலா நிகழ்ச்சி நடப்பது சிறப்பானது. நிகழ்ச்சியில் உபயதாரர்கள் வேணுகோபால், சந்திரபாலு, ராஜம், கமலம், காந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !