ஆண்டாள் கோயிலில் தங்க ரதம் வெள்ளோட்டம்
ADDED :5133 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தங்க ரதவெள்ளோட்டம் நேற்று மாலை நடந்தது. இக்கோயிலில், சென்னை பாசிகார் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் 76 லட்சம் ரூபாய் செலவில், தங்க ரதம் வடிவமைக்கப்பட்டது. நேற்று தங்க ரத வெள்ளோட்டம் நடந்தது. ரதத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ஆண்டாள் ரதத்தில் வீற்றிருந்து கோயில் பிரகாரம் சுற்றி வரப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.