உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காள பரமேஸ்வரி அம்மன்கோவிலில் நவராத்திரி விழா

அங்காள பரமேஸ்வரி அம்மன்கோவிலில் நவராத்திரி விழா

திருத்தணி:திருத்தணி பழைய பஜார் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நவராத்திரி விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கி, வரும் 7ம் தேதி வரை நடைபெறுகிறது.மூலவர் அம்மனுக்கு காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தினமும் மாலை 5 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெறும்.நாளை 108 குத்து விளக்கு பூஜையும், வரும் 7ம் தேதி மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்தில் உற்சவர் பரமேஸ்வரி அம்மன் நகர வீதிகளில் திருவீதி உலாவும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை பழைய பஜார் தெரு மக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !