முருகன் மலைக்கோவிலில் வள்ளலார் தின விழா
ADDED :5133 days ago
திருத்தணி: வள்ளலார் தின விழாவை முன்னிட்டு, முருகன் மலைக்கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, பஜனைகள் பாடப்பட்டன.திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் சார்பில், வள்ளலார் தின விழா நேற்று நடந்தது. ம.பொ.சி., சாலையில் உள்ள, சுந்தர விநாயகர் கோவிலிலிருந்து வள்ளலார் திரு உருவப்படம் ஊர்வலமாக மலைக்கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில், வள்ளலார் படத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.தொடர்ந்து பல்வேறு ஊர்களிலிருந்து, நூற்றுக்கணக்கான பஜனை கோஷ்டியினர் வந்திருந்து, பக்தி இன்னிசை பாடல்களை பாடி வழிபட்டனர்.முன்னதாக நிகழ்ச்சியை கோவில் இணை ஆணையர் கவிதா துவக்கி வைத்தார். மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை பஜனை பாடல்கள் பாடப்பட்டன. முருகன் கோவில் நிர்வாகம் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தது.