மணியார்பாளையம் கோவிலில் உற்சவம்
ADDED :3305 days ago
கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலை மணியார்பாளையம் பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை உற்சவம் நடந்தது. உற்சவத்தையொட்டி, பெருமாள், தாயார் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, தங்கக் கவசம் அணிவித்தனர். சேவை, சாற்றுமுறை, ஆராதனை நடந்தது. அலங்கார தீபங்கள் வழிபாடு, மந்திரங்களை வாசித்து உபச்சார பூஜைகள், விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனைகள் நடந்தது.