உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூர், கொங்கரத்தியில் புரட்டாசி சனி வழிபாடு

திருக்கோஷ்டியூர், கொங்கரத்தியில் புரட்டாசி சனி வழிபாடு

திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர்,கொங்கரத்தி பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனியை முன்னிட்டு பக்தர்கள் வழிபட்டனர். திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு காலசந்தி பூஜையுடன் பக்தர்கள் பெருமாளை வழிபட்டனர். பின்னர் உற்சவர் சர்வ அ<லங்காரத்துடன் ஸ்ரீதேவி பூதேவியருடன் திருமாமணி மண்டபம் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள் பெருமாளுக்கு சர்க்கரைப் பொங்கலிட்டு வழிபட்டனர். பக்தர்கள் வருகையால் நடைசாத்தப்படுவது பகல் 2 மணிக்கு தள்ளி வைக்கப்பட்டது. மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மீண்டும் பக்தர்கள் தொடர்ந்து பெருமாளை தரிசித்தனர். கொங்கரத்தி வன்புகழ் நாராயணப் பெருமாள் கோவிலில் அதிகாலை 4.15 மணி முதல் பக்தர்கள் பெருமாளை தரிசித்தனர். மூலவருக்கு வெள்ளி அங்கி சாத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. உற்சவர் ஏகாந்த அலங்காரத்தில் பிரகார வலம் வந்து கருட மண்டபத்தில் பெருமாள் தேவியருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருப்புத்துாரிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.திருப்புத்துார் நின்ற நாராயணப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 11 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !