ஜெனகை நாராயணப்பெருமாள் கோயிலில் புரட்டாசி உற்சவம்
ADDED :3364 days ago
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை நாராயணப்பெருமாள் கோயிலில் சனி புரட்டாசி உற்சவத்தில் எழுந்தருளிய சுவாமியை பக்தர்கள் தரிசித்தனர். இக்கோயிலில் புரட்டாசி தமிழ் மாதம் சனிக்கிழமை பிறந்ததை ஒட்டி அனுமன் படம் வரைந்த கொடியை கம்பத்தில் ஏற்ற, தேவி, பூதேவியருடன் நாராயணன் பெருமாள் ராஜஅலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். பக்தர்கள் தந்த பால், பூஜை பொருட்களை கோயில் பட்டர் ரகுராமர் மூலவர் அம்மன் சுவாமிக்கு அபிஷேக, தீபாராதனை செய்தார். பக்தர்களுக்கு சுவாமி பிரசாதம் வழங்கப்பட்டது.