கோவில் உண்டியலை உடைத்து திருட்டு
ADDED :3346 days ago
கடலுார்: கோவில் உண்டியலை உடைத்து காணிக்கைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடலுார், மஞ்சக்குப்பம், சப் ஜெயில் சாலையில் உள்ள வினைதீர்த்த விநாயகர் கோவில் அர்ச்சகர் நேற்று காலை வழக்கம் போல் பூஜை செய்ய சென்றபோது, முன்புற கேட் உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே இருந்த பெரிய மற்றும் சிறிய உண்டியல்கள் உடைக்கப்பட்டு, அதில் இருந்த காணிக்கை பணம் திருடு போயிருந்தது. தகவலறிந்த கடலுார் புதுநகர் போலீசார் வந்து சம்பவ இடத்தில் இருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.