கோனேரிப்பட்டி கிறிஸ்தவ ஆலய தேர்த்திருவிழா
ADDED :3345 days ago
தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே, கோனேரிப்பட்டி தூய சலேத் அன்னை கிறிஸ்தவ ஆலய தேர்த்திருவிழாவில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். தம்மம்பட்டி அருகே, கோனேரிப்பட்டி கிராமத்தில், தூயசலேத் அன்னை கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. கடந்த, 17ம் தேதி, கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் இரவு, தேர்பவனி நிகழ்ச்சி நடந்தது. முக்கிய வீதிகளில் தேர் பவனி வந்தது. விழாவில், தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கொண்டையம்பட்டி, தகரப்புதூர் பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, தூய சலேத் அன்னை ஆலயத்தில், கூட்டு திருப்பலி நிகழ்ச்சி நடந்தது.