சத்ரு சம்ஹார மகாபரணி: கோவிலில் குருபூஜை
ADDED :3345 days ago
கரூர்: கரூர், சத்ருசம்ஹார மூர்த்தி சுவாமி கோவிலில், மகாபரணி குருபூஜை விழா நடந்தது. கரூர் தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள சத்ருசம்ஹார மூர்த்தி சுவாமி கோவிலில், மகாபரணி குருபூஜை ஆராதனை விழா நேற்று நடந்தது. அதிகாலை, 4:30 மணிக்கு மகா கணபதி ஹோமம், மஹா சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமி காயத்திரி ஹோமம், குரு மூலமந்திர ஹோமம் நடந்தது. தொடர்ந்து, சேவல் கொடி ஏற்றுதல், 108 தலங்களின் தீர்த்தங்களுடன் சத்ரு மூர்த்தி சுவாமிகளுக்கு குருவாரா அபிஷேகம், மகா அலங்காரம், மகாதீபாராதனை நடந்தது. திருவிளக்கு பூஜை, ஐம்பொன் உற்சவ மூர்த்தி திருவீதி உலா நடந்தது. விழாவை, தீயணைப்பு நிலைய அதிகாரி ராஜகோபால் துவக்கி வைத்தார்.