உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழா அக்., 1ல் துவக்கம்

ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழா அக்., 1ல் துவக்கம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் வெளிபட்டணம் ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் நவராத்திரி அக்., 1ல் துவங்குகிறது. ராமநாதபுரம் ஆயிர வைசிய மகாஜன சபைக்கு பாத்தியப்பட்ட வெளிபட்டணம் சவுபாக்யநாயகி ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் நவராத்திரி விழா அக்., 1ல் காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது. அன்றைய தினம் சுவாமி துர்க்கை அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். அக்., 2ல் ரெங்கநாச்சியார், அக்., 3ல் மீனாட்சி சிவபூஜை, அக்., 4ல் காமாட்சி, அக்., 5ல் புவனேஸ்வரி, அக்., 6ல் ராஜராஜேஸ்வரி, அக்., 7ல் மகாலட்சுமி, அக்., 8ல் சரஸ்வதி, அக்.,9ல் சாகம்பரி(காய்கனி), அக்., 10ல் சர்வ அலங்காரத்தில் சுவாமி காட்சி அளிக்கிறார்.  இதை முன்னிட்டுஅக்., 1 முதல் 9 வரை தினமும் காலை பல்வேறு சிறப்பு பூஜை, ஆன்மிக சொற்பொழிவுகள் நடக்கிறது. அக்., 11ல் விஜயதசமியை முன்னிட்டு கணபதி, லலிதா, ராஜமாதங்கி, சம்ராஜ்ய மகாலட்சுமி, சுயம்வரா பார்வதி, சரஸ்வதி ஹோமம் நடக்கிறது. தினமும் மாலை 6:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை லலிதா சகஸ்ரநாம அர்ச்சனையும், தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. ஏற்பாடுகளை சவுபாக்யநாயகி நவராத்திரி விழா கைங்கர்யசபா, வார வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !