வத்திராயிருப்பு வாலகுருநாதர் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :3342 days ago
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரம் அங்காளஈஸ்வரி, வாலகுருநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முதல்நாள் காப்புக்கட்டுடன் துவங்கி யாகபூஜைகள், நவக்கிரஹ ஹோமம் நடந்தது. 2ம் நாளில் தீர்த்தம் எடுத்தல், 2ம்கால யாகபூஜைகள் நடந்தது. 3ம் நாளில் விக்னேஸ்வரபூஜை, நாடிசந்தனம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. பூஜிக்கப்பட்ட கும்பநீரால் கோயில் ராஜகோபுரம், விநாயகர், வீரபுத்திரர், சிம்மவாகனம், பரிவார தெய்வ சன்னதிகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடு , அன்னதானம் நடந்தது. மகாராஜபுரம், உ.அம்மாபட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சென்னையை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.