உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செப்.25 ல் மூல வைகையில் வைகை வழிபாடு

செப்.25 ல் மூல வைகையில் வைகை வழிபாடு

மதுரை: மதுரை திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம் சார்பில் மூல வைகையில் வைகை வழிபாடு நிகழ்ச்சி செப்., 25ல் நடக்கிறது. திருவிளையாடல் நடந்தேறிய புனிதமான வைகை நதியை வழிபாடு செய்வதையும், மாசில்லாத தண்ணீர் ஓடும் நதியாக அதை மாற்றவும், மழைவேண்டியும், வாலிப்பாறை மூல வைகையில் காலை 9 மணி முதல் வழிபாடு நடக்கிறது. விவேகானந்தா கல்லுாரி செயலாளர் சுவாமி நியமானந்தா தலைமை வகிக்கிறார். ஆயிர வைசியர் கல்லுாரி முதல்வர் அருணகிரி மற்றும் பலர் பங்கேற்கின்றனர்.யாகசாலை பூஜைகளை கார்த்திகேய சிவம் நடத்துகிறார். மழைவேண்டி சிவனடியார்களின் கூட்டு வழிபாடு மற்றும் விவேகானந்தா கல்லுாரி மாணவர்கள் ஜெபம் நடக்கிறது.திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம் தேனி அமைப்பாளர் கோபிநாத் வரவேற்கிறார். வைகை நதி பாதுகாப்பு அமைப்பாளர் ஆதிசேஷன் நன்றி கூறுகிறார். ஆன்மிக வகுப்புகள் அமைப்பாளர் முருகேசன் தொகுத்து வழங்குகிறார். ஏற்பாடுகளை தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !