உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி பிரார்த்தனை

மழை வேண்டி பிரார்த்தனை

ராஜபாளையம்: ராஜபாளையம் பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய வித்யாலயம் சார்பில் அய்யனார் கோயில் ஆற்றுப்பகுதியில் மழை வேண்டி பிரார்த்தனை நடந்தது. வித்யாலய மதுரை மண்டல ஆசிரியர் தேவகுமார் துவக்கி வைத்தார். ராஜபாளையம் பொறுப்பாசிரியர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். தியான வகுப்பை சேர்ந்த பிரம்ம குமாரிகள் மற்றும் பிரம்ம குமாரர்கள் ஆற்றில் இறங்கி தியானத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !