நவராத்திரி விழாவிற்கு கொலு பொம்மைகள்!
காஞ்சிபுரம்: நவராத்திரி விழாவிற்காக காஞ்சிபுரத்தில் கொலு பொம்மைகள் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. நவராத்திரி விழா அடுத்த மாதம் துவங்குகிறது. இதற்காக வீடுகளில் பல வகையான கொலு பொம்மைகள் வைத்து பூஜை செய்வர். வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில், பல வகையான பொம்மை கள் செய்யும் பணி, காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது. இங்கிருந்து பிற மாநிலங்களுக்கும் பொம்மைகள் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக, துர்க்கை அம்மன், கருமாரியம்மன், வள்ளி, தெய்வானையுடன் முருகன், ரங்கநாதர், பஞ்சமுக ஆஞ்சநேயர் போன்ற பொம்மைகள் செய்யப்படுகின்றன. ஆண்டு தோறும் வேலைஇருக்கும். கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி ஆகிய விழாவிற்காக பொம்மைகள் செய்து வருகிறோம். மழை காலத்தில் வேலை அதிகமாக இருக்காது. இந்த தொழிலை நம்பி, 450 குடும்பங்கள் இருக்கின்றன. இந்த தொழிலுக்கு வங்கியில் அல்லது மாவட்ட தொழில் மையத்தின் மூலம் கடன் வழங்கினால் இன்னும் பல குடும்பங்கள் வாழும்.
டி.மாரியப்பன், பொம்மை செய்பவர், முத்தியால்பேட்டை, காஞ்சிபுரம்