சிதிலமடைந்த முதலியார்குப்பம் மண்டபம் சீராகுமா?
முதலியார்குப்பம்: முதலியார்குப்பத்தில், பல ஆண்டுகளுக்கு முன் இடிந்த பழங்கால, பயணியர் மண்டபத்தை பாதுகாக்க , அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். செய்யூர் வட்டம்,இடைக்கழிநாடு பேரூராட்சி, முதலியார் குப்பத்தில், தொல்லியல் துறைக்கு சொந்தமான, 350 ஆண்டுகள் பழமையான, பக்தர்கள் தங்கும் மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தை, காசியில் இருந்து ராமேஸ்வரம் யாத்திரை செல்லும் பக்தர்கள், தங்கி செல்ல கட்டப்பட்டது. இப்போது, மண்டபத்தின் பெரும்பாலான பகுதிகள் இடிந்து விட்டன. மண்டபத்தின் பழங்கால பொருட்கள், துாண்கள் போன்றவற்றை சிலர் எடுத்து சென்று விட்டனர். தற்போது, மண்டபத்தின் இடிந்த சில பகுதிகள் மட்டுமே காணப்படுகிறது. மண்டப கட்டடம் பழுதடைந்து, பராமரிப்பு இல்லாததால், இப்பகுதியை சமூக விரோதிகள் ஆக்கிரமிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, மண்டபத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்து பாதுகாக்க வேண்டும் என பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.