உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தமிழ் கலாசார உடையில் நார்வே நாட்டு சுற்றுலா பயணிகள்: மணக்குள விநாயகர் கோவிலில் சாமி தரிசனம்

தமிழ் கலாசார உடையில் நார்வே நாட்டு சுற்றுலா பயணிகள்: மணக்குள விநாயகர் கோவிலில் சாமி தரிசனம்

புதுச்சேரி: நார்வே பல்கலைக்கழக சுற்றுலா பயணிகள் பட்டு வேட்டி, பட்டுப்புடவை சகிதமாக மணக்குள விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பாரம்பரியம் மிக்க இந்திய கலாசாரத்தை அறிய, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.  புதுச்சேரி வரும் சுற்றுலா பயணிகள், இங்குள்ள சர்வதேச நகரமான ஆரோவில், அரவிந்தர் ஆசிரமம் மற்றும் மணக்குள விநாயகர் கோவிலுக்கு செல்கின்றனர். நார்வே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த  சுற்றுலா பயணிகள்  புதுச்சேரி வந்துள்ளனர்.  இரண்டு மாதமாக இங்கு தங்கியுள்ள இவர்கள், பல்வேறு பகுதிகளுக்கு சென்று, மக்களின் வாழ்க்கை முறை, கலாசாரம், உடை, உணவு உள்ளிட்டவைகளை அறிந்து வருகின்றனர். அவர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்து, மணக்குள விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். ஆண்கள் பட்டு வேட்டி சட்டையும், பெண்கள் தலை நிறைய மல்லிகைப்பூ வைத்து பட்டுப் புடவையுடன் வந்திருந்தனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அரைக்கால் சட்டை, மேலாடையுடன் பார்த்து பழகிவிட்ட புதுச்சேரி மக்கள்,  பட்டு வேட்டி, பட்டுப்புடவையில் மங்களகரமாக கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்ததை, பார்த்து ஆச்சரியப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !