சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு குப்பை தொட்டிகள் வழங்கல்!
ADDED :3340 days ago
சிதம்பரம்: சுற்றுச்சூழல் துறை மற்றும் தேசிய பசுமைப் படை சார்பில் துாய்மையைப் பாதுகாக்கும் வகையில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு குப்பைத் தொட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் ஆயிரங்கால் மண்டபம் முன் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார் தலைமை தாங்கினார். சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ., பாண்டியன் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 25 குப்பைத் தொட்டிக்ளை கோவிலுக்கு வழங்கினார். இதனை சிவசெல்வ தீட்சிதர் நடராஜர் கோவில் சார்பில் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார், கவுன்சிலர் கர்ணா, நிர்வாகிகள் முத்துகுமரன், பிரபு, செல்வம், ஹரிகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.