கர்நாடகா பக்தர்களுக்கு தமிழக போலீசார் பாதுகாப்பு
ADDED :3338 days ago
ராமேஸ்வரம்: கர்நாடகாவில் இருந்து ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு தமிழக போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.கர்நாடகா மாநிலம், பெல்காம் பகுதியைச் சேர்ந்த, 23 பக்தர்கள் செப்., 21ல் திருப்பதியில் தரிசனம் செய்தனர். பின், வேலுார் வழியாக சேலம், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் வந்த அவர்களுக்கு அந்தந்த மாவட்ட போலீசார் பாதுகாப்பு அளித்தனர். நேற்று, ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்த கர்நாடகா பக்தர்களை போலீசார் பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். தரிசனம் செய்த பின், மகிழ்ச்சியுடன் அவர்கள் கர்நாடகா புறப்பட்டனர்.