நெல்லையப்பர் கோயில் இசைசத் தூண்களின்சப்தஸ்வரத்தை ரசித்த ஆர்.எஸ்.எஸ்.,தலைவர்
திருநெல்வேலி:நெல்லையில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க வந்திருந்த ஆர்.எஸ்.எஸ்.,தலைவர் மோகன் பகவத்,நெல்லையப்பர் கோயிலில் சுவாமி தரிசசனம் மேற்கொண்டார்.ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சசங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்).,தேசிய தலைவர் மோகன் பகவத் கடந்த மூன்று நாட்களாகநெல்லையில் முகாமிட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ்.,தொண்டர்களுடன் சசந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில்பங்கேற்றார். நேற்று வியாழக்கிழமை காலையில் நெல்லையப்பர் கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.காலையில் வந்த அவருக்கு திருக்கோயில் கண்காணிப்பாளர்கள் ரவீந்திரன், முருகன் ஆகியோர் சசால்வையணிவித்து வரவேற்றனர்.
கோயில் கொடிமரம் முன்பாக யானை காந்திமதி, ஆசீர்வாதம் செய்து வரவேற்றது.தொடர்ந்து காந்திமதிஅம்மன் சன்னதி, ஆறுமுகநயினார் சசன்னதி, நெல்லையப்பர் சசன்னதி ஆகியவற்றில்தரிசனம் மேற்கொண்டார். கோயில் ஊழியர் ரவிபட்டர், மோகன் பகவத்திற்கு, கோயிலின் தலபுராணம்,ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட நுழைவு சிற்பங்கள் போன்றவற்றை விளக்கிக்கூறினார். சுவாமி சசன்னதி முன்பாக உள்ள இசைசத்தூண்களில் எழும் சரிகமபதநி என்ற சப்த ஸ்வரங்களின்ஒலி அமைப்பினை தூண்களை தட்டி அவருக்கு விளக்கினர். இசைசயினை காது கொடுத்து கேட்டு மகிழ்ந்தார்.சுமார் அரைமணிநேர தரிசனத்திற்கு பிறகு நிகழ்வுகள் நடக்கும் மண்டபம் நோக்கி கிளம்பினார். மோகன் பகவத்திற்கு இசசட் பிரிவு போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் என பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.