பழமையான ஆஞ்சநேயர் கோவிலில் திருப்பணி
ADDED :3407 days ago
சூலுார் : கரவழி மாதப்பூரில் பழமையான ஆஞ்சநேயர் கோவிலில் திருப்பணி நடக்கிறது. கரவழி மாதப்பூரில், 200 ஆண்டுகள் பழமையான ராம பக்த ஆஞ்சநேயசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் மண்டபம், விமானம் அமைத்தல், வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் பல லட்சம் ரூபாய் செலவில் நடந்து வருகிறது. இதையடுத்து திருப்பணி முடித்து, வரும் நவம்பர் 6ம் தேதி கும்பாபிஷேகம் செய்ய திட்டமிட்டுள்ளனர். ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினர் செய்து வருகின்றனர்.