உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தாசலம் கோவில்களில் புரட்டாசி சனி சிறப்பு பூஜை

விருத்தாசலம் கோவில்களில் புரட்டாசி சனி சிறப்பு பூஜை

விருத்தாசலம்: புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, விருத்தாசலம் பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. விருத்தாசலம், பெரியார் நகரிலுள்ள ராஜகோபால சுவாமி கோவிலில், காலை 6:00 மணிக்கு விஸ்பரூப தரிசனம் நடந்தது. 8:00 மணிக்கு கால சந்தி பூஜை, 10:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், 12:00 மணிக்கு திருவேங்கமுடையான் சிறப்பு அலங்காரம், தீபாரதனை மற்றும் அன்னதானம் நடந்தது. சிறப்பு பூஜைகளை கோவில் குருக்கள் சங்கரநாராயண பட்டாச்சாரியார் செய்திருந்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இதேபோல் விருத்தாசலம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியிலுள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !