ராமேஸ்வரத்தில் 2007 திருவிளக்கு பூஜை
ADDED :3333 days ago
ராமேஸ்வரம்: உலக அமைதிக்காக, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் விவேகானந்தர் கேந்திரம் சார்பில் 2007 திருவிளக்கு பூஜை நடந்தது.
உலகில் அமைதி நிலவி, இந்தியா பொருளாதாரம் வளர்ச்சியடைவும், பெண்கள் அனைத்து துறையிலும் முன்னேறவும், மும்மதத்தினரும் சகோதர, சமத்துவத்துடன் வாழ வேண்டி ராமேஸ்வரம் விவேகானந்தர் கேந்திரம் சார்பில் ராமேஸ்வரம் கோயிலில் பிரசித்த பெற்ற மூன்றாம் பிரகாரத்தில் நேற்று இரவு, 2007 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில், ராமேஸ்வரம், ராமநாதபுரம், திருப்புல்லாணி, திருவாடனை பகுதிகளை சேர்ந்த பெண் பக்தர்கள் குத்துவிளக்குடன் பூஜையில் பங்கேற்று, தரிசனம் செய்தனர். இப்பூஜையில் ராமேஸ்வரம் தாசில்தார் ரெத்தினவள்ளி, விவோகனந்தர் கேந்திர பொருளாளர் அனுமந்த் ராவ், நிர்வாகி சரஸ்வதி உள்பட பலர் பங்கேற்றனர்.