யானைகளை வரியாக பெற்ற விநாயகர்!
ADDED :3380 days ago
பலமுறை போரில் தோற்ற மன்னன் ஒருவன், இறுதியில் விநாயகரை சரணடைந்தான். நான் போரில் ஜெயித்தால் ஆயிரம் யானைகளை திரையாக, அதாவது வரியாக கொடுப்பதாக வேண்டிக் கொண்டான். அவன் வேண்டுதல் நிறைவேற, சொன்னபடியே ஆயிரம் யானைகளை திரையாகக் கொடுத்தான். அதனால், ஆனை திரைகொண்ட விநாயகர் என்று பெயர் பெற்றார். அவரை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கிளி கோபுரத்திற்கு வலதுபுறத்தில் உள்ள சன்னதியில் தரிசிக்கலாம்.