உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் வேலுக்கு நாளை அபிஷேகம் இல்லை

திருப்பரங்குன்றம் வேலுக்கு நாளை அபிஷேகம் இல்லை

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவர் கரத்திலுள்ள வேல், நாளை (செப்.,30) மலைமேல் எடுத்துச் செல்லப்படுவதால் நாளை மட்டும் வேலுக்கு அபிஷேகம் நடக்காது. மூலவர் சிலை, மலையின் அடிவாரத்தில் குடைந்து வடிவமைக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் கொண்டுவரும் பால், பன்னீர், விபூதி உள்ளிட்ட அபிஷேகங்கள் அனைத்தும் மூலவர் கரத்திலுள்ள தங்க வேலுக்கே நடக்கிறது. மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழாவை முன்னிட்டு நாளை காலை மலைமேல் வேல் கொண்டு செல்லப்பட்டு அபிஷேகம் முடிந்து இரவு பூப்பல்லக்கில் மீண்டும் மூலவர் கரத்தில் சேர்ப்பிக்கப்படும். இதனால் நாளை மட்டும் வேலுக்கு அபிஷேகம் நடக்காது. கோயில் நடை திறப்பு, பூஜைகள் வழக்கம் போல் நடக்கும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !