புத்திரன்கோட்டை அகத்தீஸ்வரர் கோவிலில் புனரமைப்பு பணிகள்!
ADDED :3313 days ago
புத்திரன்கோட்டை, அகத்தீஸ்வரர் கோவில், பழமை மாறாமல் புனரமைக்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் வட்டம், புத்திரன்கோட்டையில், பண்டைய தமிழகத்தை ஆண்ட, பாண்டிய, பல்லவ மற்றும் சோழ மன்னர்களால், திருப்பணிகள் செய்யப்பட்ட அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் இருந்த இக்கோவில், தற்போது, பக்தர்கள் நன்கொடை மூலம், ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்படுகிறது. கோவில் திருப்பணிக்கு நன்கொடை வேண்டப்படுகிறது. மேலும் விபரங்களை அறிய விரும்புவோர், 80128 51859 என்ற எண்ணில், விழாக்குழு பொறுப்பாளர் முனுசாமியை தொடர்பு கொள்ளலாம். - நமது நிருபர் -