உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொலு பொம்மைகள் வைக்க உகந்த நேரம்: ராஜா சாஸ்திரி தகவல்!

கொலு பொம்மைகள் வைக்க உகந்த நேரம்: ராஜா சாஸ்திரி தகவல்!

புதுச்சேரி: நவராத்திரி விழா நாளை (அக்.1ம் தேதி) ஆரம்பிக்கிறது. கொலு பொம்மைகள் எடுத்து வைக்க இன்று வெள்ளிக்கிழமை உகந்த  நாள் என ராஜா சாஸ்திரிகள் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நவராத்திரி பூஜை கொலுவிற்கு கலச ஸ்தாபனம்  செய்ய, பொம்மைகள் அடுக்க அமாவாசை தினமான இன்று (30ம் தேதி) வெள்ளிக்கிழமை உகந்த தினமாகும். காலை 9 மணி முதல்  10.30 மணி வரை  புதன் சந்திர ஹோரையிலும், மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் குரு ஹோரையில் அல்லது இரவு 8 மணி முதல்  10 மணிக்குள்  சுக்ர, புதன் ஹோரையில்  மிக சிறந்த நேரமாகும். தொடர்ந்து நாளை சனிக்கிழமை அக்.1  முதல் நவராத்திரி பூஜைகளை  தொடங்கலாம்.  மேலும் விபரங்களுக்கு 98423 29770, 98423 27791 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !