கண்டாச்சிபுரத்தில் பிரதோஷ வழிபாடு
ADDED :3329 days ago
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி, மூலவர் ராமநாதீஸ்வரருக்கும், நந்தி பகவானுக்கும் அபிஷேக தீப ஆராதனைகள் நடந்தது. பின்னர், பிரதோஷ மூர்த்தி சுவாமிகள் கோவிலின் உட்பிரகாரத்தை வலம் வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு வழிபட்டனர்.