உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமாவாசையையொட்டி சுருவியில் குவிந்த மக்கள்

அமாவாசையையொட்டி சுருவியில் குவிந்த மக்கள்

கம்பம்: மகாளய அமாவாசையை முன்னிட்டு சுருளி அருவியில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

சிறப்பு வாய்ந்த மகாளய அமாவாசை தினமான செப்.,30 அதிகாலை முதல் சுருளி அருவியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அருவியில் சிறிதளவே தண்ணீர் வந்தது. ஆனால் தென்மாவட்டங்களில் இருந்து ஏராளமனோர் குவிந்ததால் அருவியில் குளிப்பதற்கு சிரமம் ஏற்பட்டது. சுருளியாற்றில் குளித்து விட்டு முன்னோர்களுக்கு ஆற்றங்கரையில் தர்ப்பணம் செய்தனர். பின்னர் இங்குள்ள ஆதிஅண்ணாமலையார் கோயில், பூதநாராயணர் கோயில், வேலப்பர் கோயில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில் பங்கேற்றனர். ஆதி அண்ணாமலையார் கோயிலில் சிவனடியார் முருகன் சுவாமிகள் சிறப்பு பூஜைகள் செய்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.

உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில், கம்பம் கம்பராயப் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !