உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்!

மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்!

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.   

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவச அலங்காரமம் செய்தனர். இரவு 11.30 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் துவங்யது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளியதும், அங்கிருந்த பக்தர்கள் கற்பூரதீபமேற்றி அம்மனை வழிபட்டனர். ஏராளமானவர்கள் சாமி வந்து ஆடினர். கோவில் பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் பக்தி பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் பாடினர். இதில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வாசுநாதன், உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை, மற்றும் அறங்காவலர்கள் கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். செஞ்சி டி. எஸ்.பி., ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகளை செய்தனர்.

எஸ்.பி., ஆய்வு: மேல்மலையனுாரில் விழாகாளங்களில் அடிக்கடி போக்குவரத்து தடை ஏற்படுகிறது. தற்போது சில மாற்றங்களை போலீசார் செய்துள்ளனர். இந்த மாற்றங்களை நேற்று எஸ்.பி., நரேந்திரன் நாயர் நேரில் ஆய்வு செய்தார். அவலுார்பேட்டை, கொடுக்கன்குப்பம், சிறுதலைபூண்டி உட்பட அனைத்து சாலைகளையும் ஆய்வு செய்தார்.

தரிசன ஏற்பாடுகளில் மாற்றம்: பக்தர்கள் நெரிசலின்றி சாமி தரிசனம் செய்ய வசதியாக வி.ஐ.பி.,க்களின் கருவறை தரிசனம் நேற்று முன்தினர் ரத்து செய்திருந்தனர். இதனால் தர்ம தரிசன வரிசையில் வந்த பக்தர்கள் குறைந்த நேரத்தில் சாமி தரிசனம் செய்தனர். வழக்கமாக 200 முதல் 250 போலீசார் பாது காப்பில் ஈடுபடுவார்கள். நேற்று முன்தினம் 489 போலீசார்பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !