கணபதி கோவிலில் நவராத்திரி விழா
ADDED :3397 days ago
விழுப்புரம்: விழுப்புரம் இ.எஸ்., கார்டன் அமிர்த கணபதி கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது. விழாவையொட்டி அமிர்த கணபதி, வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமி கோவி லில், கடந்த 30ம் தேதி இரவு மகா யாகம் நடந்தது, பின்னர் துர்க்கையம்மனுக்கு 108 குட பாலபிஷேகம், சுவாமிக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. கோவில் வளாகத்தில் பொம்மை கொலு கண்காட்சி துவங்கியது. அர்ச்சகர் கார்த்தி, நவராத்தி பூஜைகளை செய்து வருகிறார்.