ஸ்ரீவி., வடபத்ரசயனர் கோயில் புரட்டாசி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது!
ADDED :3334 days ago
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ரசயனர்கோயில் புரட்டாசி திருவோண பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி காலை 6:30 மணிக்குமேல் கொடிபட்டம் மாடவீதிகள் சுற்றி வடபத்ரசயனர்கோவிலுக்கு கொண்டுவர, பாலாஜி மற்றும் கல்யாண சுந்தரபட்டர் சிறப்பு பூஜைகள் செய்து கொடிபட்டம் ஏற்றினர். வேதபிரான் அனந்தராம கிருஷ்ணன், வெங்கடேஷ் மற்றும் பட்டர்கள், செயல் அலுவலர் ராமராஜா, அலுவலர்கள், பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து தினமும் மண்டபம்எழுந்தருளல், நாலாயிரத்திவ்ய பிரபந்த சேவாகாலம், இரவு புறப்பாடு நடக்கிறது.12 நாட்கள் நடக்கும் இவ்விழா, அக்.16ல் புஷ்பயாகத்துடன் முடிகிறது.