செங்கல்பட்டில் துவங்கியது தசரா விழா
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், 120 ஆண்டுகளுக்கு மேலாக, தசரா விழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு விழா, நேற்று முன்தினம் துவங்கியது; 11ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவிற்கு வரும் பொதுமக்கள் மற்றும் சிறுவர்களுக்கு, பொழுது போக்கு வசதிகள், அலங்கார மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு காவல் துணை கண்காணிப்பாளர் மதிவாணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எங்கெங்கு விமரிசை? செங்கல்பட்டு நகரில், சின்னக்கடை தசரா, ஜவுளிகடை தசரா, பூக்கடை தசரா மற்றும் பிரசித்திபெற்ற ஏகாம்பரேஸ்வர் கோவில், திரவுபதியம்மன் கோவில், சின்னம்மன் கோவில், ஓசூராம்மன் கோவில், எல்லையம்மன் கோவில், மேட்டுத்தெரு, பெரியநத்தம், ஆகிய பகுதிகளில் தசரா விழா கொண்டப்படுகிறது. இங்கு, நேற்று முன்தினம், பல்வேறு வடிவில், அம்மன் அலங்காரம் செய்துவைத்தனர். ஏராளமானோர் வழிபட்டு சென்றனர்.