திருப்பதி பிரம்மோற்சவம் கோலாகலம்: சின்ன சேஷ வாகனத்தில் சுவாமி உலா!
ADDED :3397 days ago
திருப்பதி: திருமலையில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நவராத்திரியின் போது, வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறும். இந்த ஆண்டு உற்சவம், நேற்று (அக்.3ல்) கொடியேற்றத்துடன் துவங்கியது. உற்சவரான மலையப்பசுவாமி தேவியருடன் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலி்த்தார்.
பிரம்மோற்சவ விழாவின் இரண்டாம் நாளான இன்று (அக்.4ல்) மலையப்பசுவாமி சின்ன சேஷ வாகனத்தில் தபசு கோலத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பெண்கள் கோலாட்டம் ஆடியபடி மலையப்ப சுவாமிகளை வலம் வந்தனர்.