செல்வ விநாயகர் கோவில் நவராத்திரி விழா துவக்கம்
அன்னுார் : சொக்கம்பாளையம் விநாயகர் கோவில் நவராத்திரி விழா துவங்கியது. சொக்கம்பாளையம் செல்வ விநாயகர் கோவில், 100 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில், 49வது ஆண்டு நவராத்திரி அன்னதான விழா அக்.,1 இரவு கொலு பூஜையுடன் துவங்கியது. 2ம் தேதி இரவு செல்வ விநாயகர் பஜனை குழுவின் பஜனை நடந்தது. வரும், 5ம் தேதி வரை தினமும் இரவு பஜனை நடக்கிறது. 6ம் தேதி தேசிய வித்யா சாலை மாணவ, மாணவியருக்கு சீருடை வழங்குதல் மற்றும் கலை நிகழ்ச்சி நடக்கிறது. 7ம் தேதி இரவு, மாதர் சங்கம் சார்பில், 108 திருவிளக்கு வழிபாடு நடக்கிறது. பின்னர் ’குடும்ப மகிழ்ச்சிக்கு காரணம் விட்டுக்கொடுப்பதிலா? தட்டிக் கேட்பதிலா?’ என்னும் தலைப்பில், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தேவராஜன் தலைமையில் பட்டிமன்றம் நடக்கிறது. 10ம் தேதி மாலையில் வாண வேடிக்கையுடன் அம்மன் அழைப்பும், இரவு பட்டி மன்றமும் நடக்கிறது. 11ம் தேதி காலை மேட்டுப்பாளையம் வாசுதேவ குழுவினரின் சிறப்பு பஜனை நடக்கிறது. மாலையில், சிறுவர் சிறுமியருக்கு விளையாட்டு போட்டி, கிருஷ்ணலீலா பஜனை குழுவுடன், சுவாமி திருவீதியுலா நடக்கிறது.