சமணர் படுகையில் வழிபாடு
ADDED :3289 days ago
மேலுார் : சென்னையை சேர்ந்த அகிம்சை நடை அமைப்பை சேர்ந்தவர்கள் 80 பேர் நேற்று மேலுார் அருகே அரிட்டாபட்டி மலைக்கு வந்தனர். அங்கு சமணர் படுகையை சுத்தம் செய்து பாராயணம் செய்தனர். தொடர்ந்து கீழவளவு பஞ்சபாண்டவர் மலைக்கு சென்று சுத்தம் செய்து வழிபட்டனர். அகிம்சை நடை அமைப்பை சேர்ந்த ராஜாமனே கூறியதாவது:-சமணர் வழித் தோன்றலில் வந்ததால் சமணர் வாழ்ந்த இடங்களை ஒவ்வொரு மாதமும் பார்வையிட்டு வருகிறோம். சமணர்கள் வாழ்ந்த இடங்களை சுத்தம் செய்வதோடு பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து தொல்லியல் மற்றும் அரசுக்கு அனுப்பி குறைகளை சரி செய்து வருகிறோம். சமணர்கள் வாழ்ந்த இடம் என்பதால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததோடு பாதுகாக்க வேண்டிய அரிய பொக்கிஷம், என்றார்.