உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

திருவண்ணாமலை: பெரணமல்லூர் அருகே, லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அடுத்து ஆவணியாபுரம் கிராமத்தில், பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. சித்திரை மாதம் லட்சுமி நரசிம்மர் சன்னதியிலும், புரட்டாசி மாதம் சீனுவாச பெருமாள் சன்னதியிலும் கொடியேற்றப்பட்டு, தொடர்ந்து, பத்து நாட்களுக்கு பிரம்மோற்சவம் நடக்கும். அதன்படி, புரட்டாசி மாதத்தை முன்னிட்டு, நேற்று அதிகாலை மூலவர் லட்சுமி நரசிம்மர், சீனுவாச பெருமாள் சன்னதிகளில் சுவாமிகளுக்கு சிறப்பு அபி?ஷகம், ஆராதனைகள் நடந்தது. பின், சீனுவாச பெருமான் சன்னதியில் உள்ள கொடிமரத்தில், பட்டாச்சாரியார் முகுந்தன் தலைமையில், பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செயதனர். இன்று, 4ம் தேதி, மற்றும், 5, 6 ஆகிய தேதிகளில், கேடய உற்சவம், 7ம் தேதி மாலை திருக்கல்யாணம், இரவு, 8:00 மணிக்கு கருட சேவை நடக்கிறது. 9ம் தேதி காலை, 7:30 மணிக்கு மேல், விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் உற்சவம் நடக்கிறது. 11ம் தேதி காலை, 11:00 மணிக்கு தீர்த்தவாரியும், இரவு கொடி இறக்கமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !