உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குழந்தைகளை தேருக்கு அடியில் கிடத்தி புகைப்பட்டி கோவிலில் நேர்த்தி கடன்

குழந்தைகளை தேருக்கு அடியில் கிடத்தி புகைப்பட்டி கோவிலில் நேர்த்தி கடன்

உளுந்துார்பேட்டை: புகைப்பட்டி வரதராஜப் பெருமாள் கோவில் தேரோட்டத்தில், குழந்தைகளை தேருக்கு அடியில் கிடத்தி, நேர்த்திக் கடன் செலுத்தினர். விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை தாலுகா, புகைப்பட்டி கிராமத்திலுள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத தேரோட்டம் நடந்தது. கடந்த 24ம் தேதி கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் மதியம் தேரோட்டம் நடந்தது. அப்போது, சுவாமியிடம் வேண்டுதலை தொடர்ந்து பெற்ற குழந்தைகளை, தேருக்கு அடியில் கிடத்தியும், பக்தர்கள் பலர், காவடி எடுத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !