கிராமத்துக்கு மழை வேண்டி பெண்கள் நூதன வழிபாடு
ADDED :3288 days ago
க.பரமத்தி: பசுபதிபாளையத்தில், மழை வேண்டி கிராம பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன வழிபாடு நடத்தினர். க.பரமத்தி ஒன்றியம், புன்னம் ஊராட்சி பசுபதிபாளையத்தில், மழை வேண்டி கிராம பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன வழிபாடு நடத்தினர். இதன்படி, 50க்கும் மேற்பட்ட பெண்கள், வீடுவீடாக சென்று கம்பங்கூழ், ராகி களி, பழைய சாதம் போன்றவற்றை சேகரித்து, அங்குள்ள மாரியம்மன் கோவிலில் வைத்தனர். பின்னர், தங்கள் கணவர்மார்களிடம், ’இந்த ஊரில் மழை இல்லை; பிழைக்க வழியில்லை’ எனக்கூறி, ஒப்பாரி வைத்தபடி ஊர் எல்லை வரை சென்றனர். மனைவியரை தொடர்ந்து சென்ற கணவன்கள், அவர்களை சமாதானம் செய்துவைத்து ஊருக்குள் அழைத்து வந்தனர். பின், வீடுவீடாக சேகரித்த பழைய சாதத்தை கரைத்து அனைவரும் குடித்தனர். இதேபோன்ற வழிபாட்டால், மழை பெய்யும் என்ற ஐதீகம் கிராம மக்களிடையே உள்ளது.