உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யோகிராம் சுரத்குமார் ஆஸ்ரமத்தில் நவராத்திரி கொலு வைப்பு

யோகிராம் சுரத்குமார் ஆஸ்ரமத்தில் நவராத்திரி கொலு வைப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை யோகிராம் சூரத்குமார் ஆஸ்ரமத்தில், நவராத்திரியை முன்னிட்டு, வாழ்வியல் நெறிகளை விளக்கும் வகையில், 1,200 கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை யோகிராம் சூரத்குமார் ஆஸ்ரமத்தில், 16ம் ஆண்டு நவராத்திரி விழா நடக்கிறது. இதில், மனித வாழ்வியல் நெறிகளை விளக்கும் வகையிலும், புராண கதைகளை விளக்கும் வகையிலும் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆதிசங்கரர், ராமானுஜர், ராகவேந்திரர், யோகி ராம்சுரத்குமார் உட்பட பல்வேறு மகான்களின் உருவ பொம்மைகள், கடவுள் பொம்மைகளும் வைக்கப்பட்டுள்ளன. கொலுவுடன், மாலை நேர ஆன்மிக நிகழ்ச்சிகளும் நடக்கிறது. இன்று மாலை பங்கஜம்தாஸ் குழுவினர் பக்திப்பாடல்கள் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த கொலுவை காண தினமும், ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !