உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி பெருமாளுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மாலை!

திருப்பதி பெருமாளுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மாலை!

ஸ்ரீவில்லிபுத்தூர்: புரட்டாசி பிரம்மோற்சவத்தின் 5ம் திருநாளில் திருமலை திருப்பதி பெருமாள் சூடுவதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை நேற்று கொண்டு செல்லபட்டது.

ஒவ்வொரு வருடமும் புரட்டாசி பிரம்மோற்சவத்தின் போதும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை திருமலை திருப்பதி பெருமாள் சூடுவதற்காக கொண்டு செல்லப்படுகிறது. வழக்கம் போல் இந்த வருடமும் கொண்டு செல்வதற்காக, நேற்று மதியம் 1.30 மணியளவில் ஆண்டாள் கோயிலில் ரகுபட்டர் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஆண்டாளுக்கு பிரமாண்ட மாலை சூடபட்டு, வேதபிரான் அனந்தராமகிருஷ்ணன் பட்டர் வேதம் படிக்க, அரையர் பாலமுகுந்தன் பிரபந்தபாடல்களையும் பாடினர். இதன் பின் ஆண்டாளுக்கு சிறப்பு தீபராதனைகள் நடத்தபட்டு, ஸ்தானிகம் ரமேஷ் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் மாலைகள் சுமந்து கோயில் மாடவீதிகள் சுற்றி வந்து பின்னர் ஆண்டாள் மாலை கார்மூலம் திருப்பதிக்கு கொண்டு செல்லபட்டது. நாளை (வெள்ளிக்கிழமை) 5ம் திருநாளை  கருடசேவையின் போது,ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மாலையை திருப்பதி பெருமாளுக்கு சாற்றப்படுகிறது. நிகழ்ச்சியில் தக்கார் ரவிச்சந்திரன், செயல்அலுவலர் ராமராஜா மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !