உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் ஜெயந்தி ஜோதி வழிபாடு

திருப்பூர் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் ஜெயந்தி ஜோதி வழிபாடு

திருப்பூர்: ராமலிங்க அடிகளின், 194வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, திருப்பூர் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில், ஜோதி வழிபாடு நடைபெற்றது. நேற்று காலை, 7:00 மணிக்கு, அகவல் வழிபாடு; தொடர்ந்து, சன்மார்க்க கொடியேற்றம் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. சன்மார்க்க சங்க செயலாளர் நீறணி பவளக்குன்றன் வரவேற்றார். ராமசாமி தலைமை வகித்தார். "வள்ளலார் வாழ்வும், வாக்கும் என்ற தலைப்பில், வடலூரை சேர்ந்த சுப்ரமணியம் பேசினார். அவர், ""வள்ளலார், கடவுளை, அருட்பெருஞ்ஜோதி வடிவில் கண்டார். அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது, ஜோதி வழிபாடு. அனைத்து உயிர்கள் மீதும், ஜீவகாருண்யத்தை, அவர் வலியுறுத்தினார். வள்ளலார் வழியை, இன்றைய இளைய தலைமுறையினருக்கும்,மாணவர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். அனைத்து உயிரினங்கள் மீதும் அன்பு செலுத்த வேண்டும். ஒற்றுமை நிறைந்த வலிமையான எதிர்கால சமுதாயம் உருவாக வேண்டும், என்றார். தொடர்ந்து, 12:30மணிக்கு, ஜோதி வழிபாடு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. சன்மார்க்க சங்க பொருளாளர் ஜீவானந்தம், பொது செயலாளர் அண்ணாதுரை, இணை செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, உதவி தலைவர் புருஷோத்தமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !