உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி கோவில்களில் அம்மனுக்கு அலங்காரம்: களைகட்டும் நவராத்திரி!

பொள்ளாச்சி கோவில்களில் அம்மனுக்கு அலங்காரம்: களைகட்டும் நவராத்திரி!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதி அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா களை கட்டியுள்ளது. தினமும் விதவிதமான அலங்காரங்களில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். சக்தியின் பல்வேறு வடிவங்களை வழங்கும் புகழ் பெற்ற விழா நவராத்திரி பண்டிகை. ஒன்பது நாட்கள், ஒன்பது விதமான சக்தியின் வடிவங்களை அம்மன் ரூபத்தில் கொண்டாடும் வகையில் இந்த பண்டிகை உள்ளது. இதற்காக கோவில்களில் அம்மனுக்கு பல வித அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரியம்மன் கோவிலில், அம்மனுக்கு நேற்று ஸ்ரீவைஷ்ணவி அலங்காரம் செய்யப்பட்டது. இன்று இந்திராணி, நாளை மகாலட்சுமி, 8ம் தேதி வெங்கடாசலபதி, 9ம் தேதி பிராஹ்மி, 10ம் தேதி சரஸ்வதி அலங்காரம் செய்யப்படும். 11ம் தேதி குதிரை வாகன காட்சி நடைபெறும். வரும், 12ம் தேதி மகா அபிேஷகத்துடன் விழா நிறைவு பெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !