உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கவுமழை மாரியம்மன் கோயிலில் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன்

கவுமழை மாரியம்மன் கோயிலில் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன்

தேவதானப்பட்டி, ஜெயமங்கலம் கவுமழை மாரியம்மன் கோயில் புரட்டாசி திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. அருகில் உள்ள சில்வார்பட்டி, தேவதானப்பட்டி, சிந்துவம்பட்டி, நடுப்பட்டி கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கோயிலில் ஆயிரம் கண் பானை, மாவிளக்கு எடுத்தும், பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். இரண்டாம் நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !