காசிவிஸ்வநாதர் கோயில்களில் ஆன்மிக சொற்பொழிவு
ADDED :3288 days ago
கம்பம், கம்பம் கம்பராயப் பெருமாள் மற்றும் காசிவிஸ்வநாதர் கோயில்களில் 29 ம் ஆண்டு நவராத்திரி விழா ஆன்மிக சொற்பொழிவு கடந்த 2 ம் தேதி துவங்கியது. அக். 11 ம் தேதி வரை தமிழறிஞர்கள், ஆன்மிகவாதிகள் ஆலய வரலாறு, நவராத்திரி வரலாறு, காக்கும் சக்தி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பேசுகின்றனர். இரவு 7 மணி முதல் 8 மணிவரை கோயில் வளாகத்தில் நடக்கிறது. ஏற்பாடுகளை செயல்அலுவலர் செந்தில்குமார், தக்கார் பாலகிருஷ்ணன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஏ.எஸ்.சுருளிவேல் செய்துள்ளனர்.