உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊத்துக்கோட்டை வந்தது திருக்குடை ஊர்வலம்

ஊத்துக்கோட்டை வந்தது திருக்குடை ஊர்வலம்

ஊத்துக்கோட்டை: திருநின்றவூர் பகுதியில் இருந்து புறப்பட்ட திருப்பதி திருக்குடைகள், ஊத்துக்கோட்டை வந்தடைந்தது. திருநின்றவூர் பகுதியில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும், புரட்டாசி மாதம் திருப்பதிக்கு திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. கடந்த, 3ம் தேதி, காலை, 10:00 மணிக்கு, திருநின்றவூர் பகுதியில் இருந்து துவங்கியது. கொமக்கம்பேடு, வடமதுரை, தண்டலம், பாலவாக்கம் வழியாக வந்த திருக்குடைகள், நேற்று முன்தினம் இரவு, ஊத்துக்கோட்டை வந்தடைந்தது. 12ம் ஆண்டாக நடைபெறும், இவ்விழாவில் திருக்குடை ஊர்வலத்தின் முன்னே பக்தர்கள் கோலாட்டம், பஜனைகள் பாடிக்கொண்டு சென்றனர். உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வெங்கடேச பெருமாள் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழி நெடுகிலும், பக்தர்கள் அன்னதானம், குளிர்பானங்கள், காபி ஆகியவை வழங்கினர். ஊர்வலம் இரவு சுருட்டப்பள்ளியை அடைந்து அங்கு தங்கினர். நேற்று காலை, திருக்குடை ஊர்வலம் கிளம்பி, அச்சமநாயுடுகண்டிகை, பிச்சாட்டூர், நின்ற கிராமம் வழியாக செல்லும், திருக்குடை ஊர்வலம், 6ம் தேதி இரவு திருச்சானுாரை அடைகிறது. வரும், 7ம் தேதி திருக்குடை ஊர்வலம், திருலையை அடைந்து, காலை, மலையப்பசுவாமிக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, பாதயாத்திரையாக திருமலை செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !